Monday, July 26, 2010

vilambaram

என்றும் என் இனிய அன்பு உள்ளங்களே
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
விளம்பரம் என்றால் என்ன?
அதன் முக்கியம் என்ன? அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் வேலை செய்யும் நான் கொஞ்சம் விவரமாக அதை பற்றி சொல்ல விரும்புகிறேன்.
ஒரு விளம்பரம் எப்படி உருவாகிறது? ஒரு விளம்பர நிறுவனம் எப்படி அதை உருவாக்குகிறார்கள்? அதற்கானஅடிப்படை என்ன? அதற்கான தேவைகள் என்ன?
முதலில் நான் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்த ஆண்டு முதல் இன்று வரை ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.
இருந்தாலும் ஒரு நிறுவனத்தின் அமைப்பு என்ன?

அதற்கு முன்:

முதலில் கடவுளாக தெரிபவர் அந்த நிறுவனத்தின் client. அவர் இல்லையேல் ஒன்றுமே இல்லை. அவரை எப்படி ஒரு விளம்பர நிறுவனம் அணுகுகிறது? முதலில் அதை தெரிந்து கொள்ளுவோம்.

உதாரணத்துக்கு பெப்சியோ அல்லது ஒரு வேறு ஏதோ பெரிய கம்பெனி, நிறுவனகளை அவர்களின் விளம்பர பணியை ஏற்க அழைப்பார்கள்.
நிறுவனங்கள் அந்த கம்பெனியின் பழைய விளம்பரிங்களின் அடிபடையிலும், அவர்களின் போட்டியாளர்களின் விளம்பரகளின்
அடிபடையிலும், இப்போதைய வியாபார சந்தையின் அடிபடையிலும், சந்தையில் செய்யப்படும் ஆராய்ச்சி/பரிசோதனை அடிப்படையிலும், அவர்களின் விளம்பர layout களை நிறுவனம் உருவாக்கும். அதனுடன் அவர்களின் பணத்தை எப்படி எங்கே செலவிட வேண்டும், எந்த மீடியாவை உபயோகிக்க வேண்டும் என்பதை கம்பெனிக்கு presentation கொடுப்பார்கள். இதே நடவடிக்கையை பல நிறுவனங்கள் அந்த கம்பனிக்கு presentation கொடுக்கும். அவை அனைத்தையும் கம்பெனி ஆராயிந்து பார்த்து எந்த நிறுவனம் அவர்களின் வியாபாரத்தை பெருக்க சரியான வழியை சொல்லுகிறதோ, எந்த நிறுவனம் சென்ற கால கட்டத்தில் இதே போல் மற்ற கம்பனியின் வியாபாரத்தை பெருக்கி உள்ளதோ அந்த நிறுவனுதுடன் ஒரு ஒப்பதந்தை ஏற்படுத்தி கொள்ளும். அந்த ஒப்பந்தந்தில் நிறுவனம் என்ன பணிகளை மேற்கொள்ளும், அதற்கான பண பரிமாற்றம் என்ன, எத்தனை ஆண்டுகளுக்கு அவர்கள் இருவரும் இணைந்து இப்பணியை மேற்கொள்வார்கள் போன்றவற்றை விவரமாக எழுதி கையொப்பம் இருவராலும் இடப்படும்.
இந்த presentation நடவடிக்கை முடிய ஏறக்குறைய ஒன்று முதல் மூன்று மாதங்கள் ஆகலாம்.

client கிடைச்சாச்சு

அடுத்ததில் நிறுவனத்தின் நடவடிக்கையை பார்ப்போம்.

Friday, July 23, 2010

தொடக்கம்

எங்கள் அம்மாவை வணங்கி தொடங்கும் இம்முயற்சி வெற்றி பெற உங்களின் வாழ்த்துக்களை வரவேற்கிறேன்.
இன்று மாலை நாங்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வந்தோம். இதுதான் இப்பகுதியில் என்னுடைய முதல் எழுத்து.
மேலும் பல பல இப்பகுதியில் எழுத முயற்சி செய்வேன்.

நன்றி